அடாடா... மைதானம் முழுக்க புற்கள் வளர்ந்து அடர்ந்து கிடக்கின்றனவே! இந்தக் குதிரை சிலகாலம் மேய வராததன் விளைவு.... போகட்டும், இனி நிறைய மேயலாம். மேய்வதற்காக இதனை இங்கு இழுத்து வந்த ‘திடங்கொண்டு போராடு’ சீனுவுக்கும், ‘நதிக்கரையில்’ சமீராவுக்கும் நன்றிகளுடன் துவங்கலாம் இப்போது.
தமிழில் நாம் புதுமைப்பித்தனின் சிறுகதைகளை எப்படிக் கொண்டாடி ரசிக்கிறோமோ, அப்படி ஆங்கிலத்தில் ‘ஓஹென்றி’ எழுதிய சிறுகதைகள். எதிர்பாராத முடிவுடன் சிறுகதைகளைப் படைப்பது அவரின் தனித்துவம். அவரின் சிறுகதை ஒன்றை இங்கே படியுங்கள்... அல்லது பாருங்கள்...!
அப்புறம்... அவள் நினைத்தபடி அவன் இப்போதும் அவள் அழகாக இருப்பதாக நினைத்தானா, என்ன செய்தான், க்ளைமாக்ஸ் என்ன என்பதை திங்களன்று மைதானத்தி்ல் கண்டு ரசியுங்கள் நீங்கள்!