Quantcast
Channel: மேய்ச்சல் மைதானம்
Viewing all 41 articles
Browse latest View live

கடைசி இலை - 2

$
0
0
ஓ ஹென்றி எழுதுன கடைசி இலை கதையின் போன ரீல்ல என்ன நடந்துச்சுன்னு உங்களுக்குத் தெரியாது - நீங்க பாக்கலைன்னா... கொஞ்சம் சிரமம் பாக்காம இங்கபோய் பாத்துட்டு வந்துடுங்களேன் ப்ளீஸ்...






 சூவின் முயற்சிக்கு பெர்மான் உதவினாரா இல்லையா? என்பதை அடுத்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம். கொஞ்சம் வெய்ட் ப்ளீஸ்...!


சித்திர மேகலை - 3

$
0
0
அமரர் திரு.கி.வா.ஜகந்நாதன்அவர்களின் சிறந்த ரசனையான எழுத்தில் இந்த சித்திர மேலை தொடர்கிறது...
 
                                               3. கண்ணீர் நனைத்த மாலை

‘‘அடடா! இந்த மாலையைக் கெடுத்து விட்டாயே! ஏன் அம்மா அழுகிறாய்?’’ என்று மாதவி, மணிமேகலையைக் கேட்டபடியே அவள் கண்ணீரைத் துடைத்தாள். அவள் பேச இயலாமல் விம்மினாள். தன் தந்தையாகிய கோவலனுக்கும் தாயாகிய கண்ணகிக்கும் உண்டான துன்பங்களைச் செவியேற்ற மணிமேகலை அவற்றை நினைத்து வருந்தினாள். அவள் விட்ட கண்ணீர் அப்போது அவள் தொடுத்துக் கொண்டிருந்த மலர்மாலையை நனைத்து விட்டது.

‘‘ஏன் அம்மா வருந்துகிறாய்? உன் கண்ணீரால் இந்த மாலை தூ்மை இழந்து விட்டதே! நீ போய் புதிய மலர்களைப் பறித்துக் கொண்டு வா’’ என்றாள் மாதவி.

அவர்களுடன் அருகில் பூத்தொடுத்துக் கொண்டிருந்த சுதமதி, ‘‘இவளைத் தனியாகவா அனுப்புகிறாய்?’’ என்று கேட்டாள். அவள் மாதவியின் தோழி.

‘‘ஆம்’’ என்றாள் மாதவி.

‘‘நல்ல காரியம் செய்தாய்! இந்த அழகியின் நீல மலர் விழியில் நீர்த் துளிப்பதைக் கண்டால் காமனும் தன் கையில் உள்ள வில்லையும் அம்பையும் போட்டுவிட்டு நடுங்குவானே! இவள் அழகைக் கண்டால் உலகிலுள்ள ஆடவர் என்ன பாடு படுவார்கள் தெரியுமா? அவர்கள் இவளைக் கண்ட பிறகும் அகன்று  போனால் பேடிகளாகத்தான் இருக்க முடியும்.’’

‘‘காவிரிப்பூம்பட்டினத்தில் அப்படியெல்லாம் நடக்குமா?’’

‘‘நன்றாக நடக்கும். என் சொந்த அனுபவத்தைச் சொல்கிறேன். கேள். இதுவரைக்கும் நான் சொன்னதில்லை.’’

‘‘அது என்ன?’’

‘‘நான் கெளசிகன் என்ற அந்தணனுடைய பெண். இப்போது தனியே இப்படி வாழ்கிறேன். அதற்குக் காரணம் நான் தனியாகப் போனதுதான்.’’

‘‘உன் கதையைச் சொல், கேட்கிறேன்.’’


‘‘அன்று ஒரு நாள் - அப்போது நான் இளமையும், எழிலும் பொங்க விளங்கினேன். - பூம்பொழிலில் தனியே மலர் கொய்திருந்தேன். ஊரில் இந்திர விழா நடந்து கொண்டிருந்த காலம். அப்போது மாருதவேகன் என்ற வித்தியாதரன், விழாவைப் பார்க்க இந்த ஊருக்கு வந்திருந்தான். ஊரைச் சுற்றிப் பார்க்கும் போது என் எழில் அவனை வா என்று அழைத்தது. என்னை வலியத் தூக்கிக் கொண்டு சென்று விட்டான். நான் அவனுடன் சில காலம் வாழ்ந்தேன். பின்பு அவனே மீ்ண்டும் இந்நகரத்தில் கொண்டுவந்து விட்டுப் போய்விட்ாடன். இதே நகரத்தில் நடந்தது இது.’’

‘‘அப்படியா! இது எனக்குத் தெரியாதே!’’

‘‘தெரிந்தவள் நான் சொல்கிறேன். இவளைத் தனியே அனுப்பக் கூடாது. கண்ட இடங்களுக்கும் போகக் கூடாது. மலர் கிடைக்கும் வனங்கள் பல இந்நகரில் உண்டு. இருந்தாலும் எல்லா இடங்களுக்கும் போகக் கூடாது.’’

‘‘ஏன்?’’

‘‘வாவிக்கரையில் இருக்கும் இலவந்திகைச் சோலைக்குப் போனால் அங்கே அரசனைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். உத்தியான வனத்தைப் பூதம் காக்கிறதென்று சொல்கிறார்கள். சம்பாதி வனம், கவேர வனம் என்ற இரண்டிலும் துன்பத்தைச் செய்யும் சிறு தெய்வங்கள் இருக்கும். ஆகையால் புத்தபிரானுடைய அருளாணையால் மலர்கள் மலரும் உபவனம் என்ற வனமே இவள் போவதற்கு உரியது.’’

‘‘அந்த வனம் எத்தகையது?’’ என்று மாதவி கேட்டாள்.

சுதமதி உபவனத்தைப் பற்றிச் சொல்லலானாள்.

                                                                                                   -இன்னும் வரும்....

கடைசி இலை - 3

$
0
0
ஓ ஹென்றியின் கடைசி இலை படக்கதையின் மூன்றாவது பகுதி இங்கே உங்களுக்காக. அடுத்த பகுதியுடன் இந்தக் கதை முற்றுப் பெற உள்ள்து.






ஜான்ஸியின் உயிர் காப்பாற்றப்பட்டதா? சூவும் பெர்மானும்‌ என்னதான் செய்தார்கள்? அடுத்ததாக வரும் நிறைவுப் பகுதியில் புரிந்து விடும்!


சித்திர மேகலை - 4

$
0
0
எழுத்தாக்கம்: அமரர் திரு.கி.வா.ஜ.
 
                         4. தெருவில் காட்சிகள்

சுதமதி சொல்கிறாள்:

‘‘உபவனத்தல் பளிங்கினால் ஆன அறை ஒன்று இருக்கிறது. அதன் உள்ளே போனவர்களின் உருவம் வெளியே தெரியுமேயன்றி, அவர்கள் பேசும் பேச்சுக் கேட்காது. அந்தப் பளிங்கு மண்டபத்தில் ஒரு பத்ம பீடம் இருக்கிறது. அதன் மேல் அரு‌ம்பை இட்டால் அது மலரும்; மலர்ந்தவை பின்பு வாடுவதில்லை; வண்டு மொய்ப்பதில்லை. அந்த வனத்தில் அன்பும் அருளும் ஆர் உயிர் ஓம்பும் ஒரு பெருங் கொள்கையும் என்றும் ஒழியாத நோன்மையுடைய பகவான் புத்தருடைய ஆணையினால் பலமரங்களும் மலரும். அந்த வனத்துக்குத்தான் உன் மகள் செல்ல வேண்டும். நானு்ம் அவளோடு செல்வேன்.’’

இவ்வாறு சொல்லிய சுதமதி, மணிமேகலையை அழைத்துக் கொண்டு உபவனத்தை நோக்கிப் புறப்பட்டாள்.

வழியில் எத்தனை ஆரவாரம்! அதோ ஒரு சமணத் துறவி. கையிலே உறி; அதில் ஒரு பாத்திரம்; மற்றொரு கையில் ஒரு கோல்; ஆடை அணியாத் திருமேனி; நீராடாத கோலம். இப்படிப் போகிறவனைக் கள்ளைக் குடித்து ஆட்டம் போடுகிறவன் ஒருவன் அணுகி, ‘‘இந்த உடம்புச் சிறையில் தடுமாறுகிற சுவாமி, ‌கொழு மடல் தெங்கில் விளையும் தேறலை உண்டு பாரும்; அதன் பயனை நீர் அறிந்தால் பிறகு வேறு ஒன்றிலும் நாட்டம் எழாது!’’ என்று கெஞ்சுகிறான்.

இதோ மற்றொரு கோலம். இவன் கோலமோ, அலங்கோலமோ காணக் காணச் சிரிப்பு வருகிறது. தோளிலே அரளி மாலை, மார்பில எருக்கமாலை; இடையிலே கந்தல் துணி; அதனோடு இலைகளையும் சேர்த்துக் கட்டியிருக்கிறான். உடம்பெல்லாம் சாம்பல்; அதனோடு சந்தனம். என்ன என்னவோ உளறுகிறான். ஒரு சமயம் அழுகிறான்; ஒரு சமயம் விழுகிறான்; அரற்றுகிறான்; தொழுகிறான்; இப்படி வரும் பைத்தியத்தைச் சுற்றிச் சிலர் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.


மற்றோரிடத்தில் ஆணும் அல்லாமல் பெண்ணும் அல்லாமல் இருக்கும் பேடி ஒருவன் போகிறான். அவனைச் சுற்றிப் பத்துப் பேர்; இந்திர விழாவுக்காக வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் பூம்புகாரிலுள்ள அழகிய மாளிகைகளின் ஓவியங்களைக் கண்டு நிற்கிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் தம் குழந்தைகளை அலங்கரித்து விளையாட்டு வண்டியின் மேலுள்ள யானையின் மீதே ஏற்றி, ‘‘எல்லாரும் வந்து பாருங்கள். முருகன் திருவிழாவை வந்து காணுங்கள்’’ என்று சொல்லி அந்தக் குழந்தைகளின் அழகைக் கண்டு நிற்கிறார்கள். குழந்தைகளின் வாயிலிருந்து அழுது ஒழுகி மார்பிலுள்ள ஐம்படையை நனைக்கிறது. இடையில் ஆடையை உடுத்தினார்களேயன்றி, அது பேருக்குத்தான். குழந்தையிடம் மறைக்க என்ன இருக்கிறது?

செவ்வாய்க குதலை மெய்பெறா மழலை
சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப
அற்றம் காவாச் சுற்றுடைப் பூந்துகில்
தொடுத்த மிக்கோவை உடுப்பொடு துயல்வரத்


தளர்நடை நடக்கும் குழந்தைகள் அவர்கள்.

இந்தக் கூட்டத்தினிடையே மணிமேகலை சென்றாள். அவள் அலங்காரமற்ற கோலத்தைக் கண்ட மக்கள், ‘‘இவளைத் தவக்கோலப்படுத்திய தாய் மிகக் கொடியவள். மலர் கொய்ய மலர் வனத்துக்கு இவள் போகிறாள். அங்கு உள்ள அன்னம் இவள் நடையைக் கற்குமோ? சாயலை மயில் உணருமோ? கிளி செஞ்சொல்லைப் பயிலுமோ?’’ என்று ஏங்கினார்கள்.

குரவம், மரவம், குருந்து, கொன்றை முதலிய பல மலர்கள் விரிந்து வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் பாடம் போர்த்ததுவே போலத் தோன்றிய உபவனத்தை அவள் சுதமதியுடன் அடைந்தாள்.

                                                                                                     -‌இன்னும் வரும்....

கடைசி இலை - 4

கண்ணை இழந்தாலும்... - 1

$
0
0
மைதானம் நிறைய புற்கள் இருந்தாலும் மேய்வதற்கு குதிரைக்கு நேரமில்லாமல்தான் போய்விட்டது. பாருங்களேன்... ‘சித்திர மேகலை’ககுப் பின் எதுவும் மேயாமலேயே ஆறு மாதங்கள் ஓடிவிட்டன...! (எலேய்... ஆறு மாசமா நல்லாக் கொறட்டை விட்டுட்டு, இப்ப ஆச்சரியமா படறே?ன்னு நீங்க பல்லை நறநறப்பது கேட்கிறது!) போகட்டும்... இந்த சித்தித் தொடருடன் சித்திர மேகலையும் இணைந்தே இனி தொடர்ந்து வரும்! (அட... நம்புங்கப்பா...!)

இந்த சித்திரக் கதை பழைய குமுதம் இதழ்களிலிருந்து (ஆண்டு தெரியவில்லை) தொகுத்து வழங்கப்படுகிறது. நன்றி குமுதம்!

 

சித்திரமேகலை - 5

$
0
0
சித்திரமேகலை இதுவரை......

புகாரில் இந்திர விழா நடைபெறும் சமயம், ஊரே கோலாகலக் கொண்டாட்டத்தில் இருக்கிறது. மாதவி துறவறம் பூண்டிருப்பதால் வருந்திய அவள் தாய் சித்திராபதி, வசந்தமாலை என்ற தோழியை அனுப்பி, துறவறக் கோலத்தைத் துறக்கும்படி மாதவியிடம் வேண்டச் சொல்ல, மாதவி அவ்வேண்டுகோளை ஏற்க மறுக்கிறாள். அதனால் வருந்தும் தன் மகள் மணிமேகலையை பூக்கொய்து வரச் சொல்கிறாள் மாதவி. மேகலையின் தோழி சுதமதி, முன்பொரு சமயம் அவள் மலர் கொய்யச் சென்றிருந்தபோது ஒரு கந்தர்வன் அவள்மேல் மையல் கொண்டு தூக்கிச் சென்றதையும், அவனோடு சில காலம் வாழ்ந்தபின் மீண்டும் இங்கு கொண்டு வந்துவிட்ட¬துயும் சொல்லி, புத்தர் அருள் பெற்ற உபவனத்திற்கு மட்டுமே மேகலை செல்ல வேண்டும் என்கிறாள். உபவனத்திலுள்ள பளிங்கு அறை ஒன்றில் உள்ளே போனவர்களின் உருவம் தெரியுமேயன்றி அவர்கள பேசுவது கேட்காது என்றும், அங்குள்ள பத்ம பீடத்தில் அரும்புகளை இட்டால் அவை மலர்ந்த பின்பு வாடுவதில்லை, வண்டு மொய்ப்பதில்லை என்று கூறி அத்தகைய வனத்துக்கு மேகலையை அழைத்துச் செல்கிறேன் என்கிறாள். அவர்கள் புகாரின் அழகுக் கோலங்களைப் பார்த்தபடி உபவனத்தை அடைகிறார்கள். அப்போது...

                                 5. உதயகுமாரன் வருகை

ங்கும் ஒரே குழப்பம்! ஆரவாரம்!

மக்கள் அங்கும் இங்கும் நிலைதடுமாறி ஓடுகிறார்கள். ‘‘என்ன செய்தி?"என்று கேட்பார்க்கு விடை சொல்லக் கூட அவர்களுக்கு அமைதியில்லை. ‘‘யானைக்கு மதம் பிடித்து விட்டது. அதோ அங்கே வருகிறது. ஓடுங்கள்! ஓடுங்கள்!"என்று சிலர் கூவுகிறார்கள். காவிரிப் பூம்பட்டிணத்தில் அரசரது பட்டத்து யானையாகிய காலவேகத்துக்கு மதம் பிடித்துவிட்டது. பாகர் முதலியவர்கள் அடக்கியும் அடங்காமல் அது ஓடி வருகிறது. மக்களை அச்சத்தில் நிலைகுலையச் செய்து திரிகிறது.

சிறிது நேரத்தில் குதிரையின் மேல் விரைந்து வந்தான் உதயகுமாரன். அவன் அரசிளங்குமரன்; வீரன். மதத்தால் அடக்குவார் இன்றித் திரிந்த யானையை அவன் அடக்கி விட்டான்! என்ன ஆச்சரியம்! ஊரே அவனை வாழ்த்தியது. அந்த வெற்றி மிடுக்கோடு அவன் ஒர தேரில் ஏறி அரண்மனைக்குத் திரும்பினான். அவனைப் பார்த்தால் முருகனைப் போலத் தோன்றியது; அத்தனை அழகன். அவன் அணிந்திருக்கும் சோழர் அடையாள மாலையாகிய ஆத்தியே அவனை அடையாளம் காட்டியது.

காரலர் கடம்பன் அல்லன் என்பது
ஆரங் கண்ணியிற் சாற்றினன் வருவோன்


அப்படி வரும்போது நாடக மடந்தையர் வாழும் வீதி வழியே சென்றான். அங்கே அவனுடைய நண்பனாகிய எட்டிகுமரன் என்பவன் ஓர் அழகியுடன் இருந்தான். அவள் கையில் வீணை இருந்தது. ஆனால் அதை வாசிக்காமல் சித்திரத்தில் எழுதிய பாவையைப் போல் மயங்கியிருந்தாள். அவளை உதயகுமாரன் கண்டான்.


தேரில் இருந்தபடியே, ‘‘உனக்கு என்ன இடுக்கண் அப்பா வந்தது? இப்படி மயங்கியிருக்கிறாயே?"என்று கேட்டான். அதைக் கேட்ட எட்டிகுமரன் தன் காதல் அணங்கோடு ஓடடிவந்து அரசிளங்குமரனை வணங்கி, ‘‘செப்புக்குள் வைத்த பூவைப் போல வாடிய அழகியாகிய மணிமேகலை மலர்வனத்துக்குப் போவதைப் பார்த்தேன். அப்போது கோவலனுடைய நினைவு வந்தது. துயரம் மீதூர்ந்தது. யாழைச் சரியாக வாசிக்க முடியவில்லை"என்றான்.

‘‘அப்படியா?"என்று உதயகுமாரன் மகிழ்ச்சியோடு கூவினான். ‘‘அவளை என் தேரில் ஏற்றிக் கொண்டு வருகிறேன்"என்று உபவனத்தை நோக்கித் தேரை ஓட்டினான்.

அங்கே சுதமதி பூம்பொழிலின் எழிற் காட்சிகளையும் பொய்கையையும் மணிமேகலைக்குக் காட்டிக் கொண்டிருந்தாள். அப்போது வேகமாகத் தேரில் உதயகுமாரன் வருவதை மணிமேகலை அறிந்தாள். ‘‘இளவரசன் என் மேல் விருப்பம் உடையவன் என்பதை வசந்தமாலை ஒரு நாள் என் தாயிடம் சொன்னதைக் கேட்டேன். இப்போது இவன் என்னை ஏதேனும் செய்தால் என் செய்வேன்?"என்று மருண்டு உரைத்தாள். சுதமதிக்கும் நடுக்கம் உண்டாயிற்று. உடனே ‘‘இதோ, இந்தப் பளிங்கு அறைக்குள் புகுந்து கொள்"என்று சொல்லி அவளை உள்ளே போகச் செய்தாள். மணிமேகலை சென்று தாழைப் போட்டுக் கொண்டாள். அந்த அறைக்குச் சற்று தூரத்தில் சுதமதி ஒன்றும் அறியாதவளைப் போல நின்று கொண்டிருந்தாள்.

உதயகுமாரன், மணிமேகலை எங்கே இருக்கிறாள் என்று நான்கு திசைகளையும் பார்த்துக் கொண்டே வந்தான். சுதமதியைக் கண்டு, ‘‘மணிமேகலை பருவம் அடைந்து மெல்லியலாகி விட்டாளோ? மாதவர் இருக்கும் இடத்தை விட்டுத் தனியாக இங்கே வந்திருக்கிறாளாமே! ஏன் வந்தாள்?"என்று கேட்டான். சுதமதி சற்றே கலங்கி நின்றாள். பிறகு பேசத் தொடங்கினாள்...

என்ன பேசியிருப்பாள்...? வெய்ட் ப்ளீஸ்...!

கண்ணை இழந்தாலும் - 2

$
0
0
இந்த சித்திரக் கதை பழைய குமுதம் இதழ்களிலிருந்து (ஆண்டு தெரியவில்லை) தொகுத்து வழங்கப்படுகிறது. நன்றி குமுதம்!



சித்திர மேகலை - 6

$
0
0
                    - ‘வாகீச கலாநிதி’ திரு.கி.வா.ஜெகந்நாதன் எழுதியது -

                                                         6. சுதமதியின் கதை

தயகுமாரனை நோக்கி சுதமதி சொல்லலானாள் : ‘‘நீதி திறம்பாத சோழ குலத்தில் உதிதத நினக்குப் பெண்ணாகிய நானா நல்லுரை நவில்வது? ஆயினும் நான் ஒன்று சொல்கிறேன்; கேட்டருள வேண்டும். இந்த உடம்பைப் பற்றிச் சற்றே நினைத்துப் பார். இது வினையினால் வந்தது. வினையை விளைக்கக் கருவியாக இருப்பது. ஆடை அணி இல்லாவிட்டால் வெறும் புலால் பிண்டமாக இருப்பது கிழப்பருவம் எய்தி இறந்து போவது. இதைப் பெரிதாகக் கருதலாமா?" -இவ்வாறு அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பளிங்கு அறைக்குள் இருந்த மணிமேகலையின் உருவம் அவனுக்குத் தோன்றியது.

முதலில் அந்த உருவத்தை ஓவியம் என்று மயங்கினான். அந்தக் கண்ணாடி மண்டபச் சுவரைத் தடவிப் பார்த்தான். அந்த அறைக்குள் புகலாம் என்று எண்ணினான். ‘‘உன் தோழி எங்கே இருக்கிறாள்? எப்படி இருக்கிறாள்?"என்று சுதமதியைக் கேட்டான்.

அவனுடைய உள்ளத்தே எழுந்த ஆசைக் கனலை அவள் உணர்ந்தாள். ‘‘அவள் உன் அழகைக் கண்ணால் பார்க்க மாட்டாள். தவக்கோலம் கொண்டு விட்டாள். அவளுக்குத் தீங்கு இழைத்தால் அவள் விடும் சாபம் அம்பைப் போலத் துன்புறுத்தும். காமனை வென்று விட்டாள் அவள்"என்றாள்.


‘‘வெள்ளம் மிகுதியானால் அதை அடக்க முடியுமோ? அவளை எப்படியும் என் வசப்படுத்துகிறேன், பார்’’ என்று திரும்பினவன், மறுபடியும் சுதமதியைப் பார்த்து, ‘‘அதுசரி... நீ யயாரோ வித்தியாதரனால் அருகன் கோயிலில் விடப்பட்டவள் என்றல்லவா சொன்னார்கள்? இவளோடு வந்த காரணம் என்ன?’’ என்று கேட்டான்.

‘‘அரசிளங்குமர, நான் என் அன்னையை இழந்தேன். மாருதவேகனிடம் சில காலம் இருந்தேன். அவன் என்னை இங்குள்ள அருகன் கோயிலில் கொண்டு வந்து விட்டான். என் தந்தை என்னைக் காணாமல் நெடுகச் சுற்றிக் கடைசியில் இங்கே என்னைக் கண்டார்& பலர் வீடுகளில் இரந்து உண்டு வாழ்ந்தபோது. ஒரு நாள் ஒரு பசு அவனை முட்ட, குடல் வெளியே வந்து விட்டது. அதைப் பிடித்துக் கொண்டு நான் இருந்த இடத்திற்கு வந்து அங்குள்ள முனிவர்களிடம், ‘‘என்னைக் காப்பாற்ற வேண்டும்"என்று கதறினான். அவர்கள் சினந்து என்னையும் அவனோடு சேர்த்துத் துரத்தி விட்டார்கள். அப்போது வழியில் சங்கதருமன் என்னும் பௌத்த முனிவன் என் தந்தையைத் தாங்கி ஆதரவு செய்து பௌத்த பிட்சுக்கள் உறையும் இடத்திற் சேர்த்தான். அம்முனிவன், புத்தபிரானுடைய பெருமையை எனக்கு உபதேசித்தான். அதுமுதல் நான் பௌத்த பிட்சுணியாகிய மாதவியுடன் இருந்து வருகிறேன்"என்றாள்.

‘‘சரி, சரி... நான் சித்திராபதியைக் கொண்டு என் காரியத்தைச் சாதித்துக் கொள்கிறேன்"என்று அங்கிருந்து உதயகுமாரன் போய்விட்டான்.

பிறகு மணிமேகலை மெல்ல வெளியே வந்தாள். ‘‘என்னை விலைமகள் என்று அலட்சியமாக அரசிளங்குமரன் எண்ணுகிறான் என்று அறிந்தும் என் மனம் அவன் பின்னே செல்கிறதே! இதுதான் காமத்தியற்கையோ?"என்று தனக்கு உண்டான உணர்ச்சியைச் சொன்னாள். அப்போது இந்திர விழாவைக் காணும் பொருட்டு மணிமேகலா தெய்வம் பூம்புகாரிலுள்ள ஒரு பெண்மணியைப் போலக் கோலம் பூண்டு அங்கே வந்தாள். அவ்விடத்தில் இருந்த புத்தனுடைய பாத பீடத்தை வணங்கிப் புத்தனைத் துதிக்கலானாள்.

‘‘புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பின் உயர்ந்தோய்! என்கோ
குற்றங் கெடுத்தோய் செற்றஞ் செறுத்தோய்!
முற்ற உணர்ந்த முதல்வா என்கோ!"


என்று பலவகையாகத் துதி பாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்திமாலை வந்தடைந்தது.

                                                                    -தொடரும்...

கண்ணை இழந்தாலும் - 3

$
0
0
இந்த சித்திரக் கதை பழைய குமுதம் இதழ்களிலிருந்து (ஆண்டு தெரியவில்லை) தொகுத்து வழங்கப்படுகிறது. நன்றி குமுதம்! 


கண்ணை இழந்தாலும் - 4

$
0
0
இந்த சித்திரக் கதை பழைய குமுதம் இதழ்களிலிருந்து (ஆண்டு தெரியவில்லை) தொகுத்து வழங்கப்படுகிறது. நன்றி குமுதம்! 


கண்ணை இழந்தாலும் - 5

$
0
0
மிக நீண்ட இடைவெளி ஆகி விட்டதால் இந்த சித்திரக் கதையின் எஞ்சியுள்ள பகுதிகளையும் சேர்த்தே வலையேற்றி இருக்கிறேன். இவற்றையும் இனி வரவிருக்கும் பொக்கிஷப் பகிர்வுகளையும் ரசித்து கருத்துக்கூற தங்களை அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.


கண்ணை இழந்தாலும் - 6

கண்ணை இழந்தாலும் - 7

கத்தரித்தவை - 11

$
0
0
ழைய புத்தகங்களிலருந்து கத்தரிச்சு எடுத்து உங்களுக்கு வழங்கி நாளாச்சில்ல...? கொஞ்சம் பழைய சினிமா உலகத்துப் பக்கம் ஒதுங்கிட்டு வரலாம் இன்னிக்கு.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆரம்பிச்சு வெச்ச பல பெரிய, நல்ல ப்ராஜக்ட்டுகள் ஆரம்ப நிலையிலேயே நின்னு போகும்படி ஆனது தமிழ் சினிமாவோட துரதிர்ஷ்டங்கள்ல ஒண்ணு. கல்கியின் பொன்னியின் செல்வன்மற்றும் சிவகாமியின் சபதம்ஆகிய சிறந்த நாவல்களை அவர் படமாக்கி நடிக்க விரும்பியிருக்கார். ஒருகோடி ரூபாய் பட்ஜெட்ல (அன்றைய மதிப்பில் யாரும் நினைச்சே பார்க்க முடியாத தொகை)அகன்ற திரையில் ‘சிவகாமியின் சபதம்’ எடுக்க திட்டமிட்டு பேப்பர்கள்ல செய்தியும் வெளியாகியிருக்குது. அந்த கட்டிங் இங்க...


இந்த ப்ராஜக்ட் வந்திருந்தா வாத்யாரோட முதல் அகன்ற திரை திரைப்படம் இதுவாத்தான் இருந்திருக்கும். ஹும்...! மகேந்திர பல்லவனாகவும், நரசிம்ம பல்லவனாகவும் வாத்யாரே நடித்து, அவரே இயக்கறதா திட்டம். (கதையில நரசிம்ம பல்லவனுக்கு இணையா அப்பா மகேந்திரவர்மர் இருக்கறப்ப, வேற ஒருத்தரை பண்ண விட்ருவாரா என்ன வாத்யாரு?)புலிகேசியாவும், நாகநந்தியாவும் இரட்டை வேஷத்துல வில்லனும்... ஆஸ்தான வில்லன் நம்பியார விட்டா வேற யாரு? நரசிம்மவர்மரோட உயிர்த்தோழன் பரஞ்சோதியா முத்துராமனும், சிவகாமியா சரோஜாதேவியும் வெச்சு பண்ணலாம்னு திட்டம் போட்ருக்காரு வாத்யாரு. (சிவகாமியின் நடனத்த கல்கி கதைல சொல்றதுக்கும், அந்தம்மா அரசகட்டளைல ஆடுற பரதத்தையும்(?) பாத்தா சிப்பு சிப்பா வரும்.)

சங்கர் லீங்கற ஓவியரை வெச்சு அந்த கேரக்டர்கள்ல தங்களை வரைஞ்சு நல்லா இருக்கான்னு டெஸ்ட்லாம் பண்ணிப் பாத்திருக்காரு வாத்யாரு. அந்த ஓவியங்களை ஆனந்தவிகடன் தீபாவளி மலர் வெளியிட்டிருந்துச்சு. அந்தப் படங்கள் இங்க...


எப்பூடி...? நரசிம்ம வர்மரா வாத்யாரப் பாக்க ஷோக்காத்தான் கீறாரு இல்ல...? ரைட்டு வாத்யாருக்கு கொஞ்சம் பின்னோக்கிப் போய்ப் பாத்தா... தமிழ்ல வந்த முதல் சினிமாவான காளிதாஸ்தான் கண்ணுக்குத் தெரியுது. அதயும் பாருங்களேன்...


காளிதாஸ்லருந்து கொஞ்சம் தள்ளி இங்கிட்டு வந்து பாத்தா... எம்.எஸ். அம்மா நடிச்சுப் பாடி அசத்தின சகுந்தலை படத்தோட பாட்டுக்களும் கதைச்சுருக்கமும் அடங்கின ரெக்கார்டோட கவரு கண்ல படுது. அதையும் பாத்து ரசியுங்களேன் கொஞ்சம்...


அதையும் தாண்டி இன்னும் கொஞ்சம் பாக்கலாம்னா... அஸ்கு புஸ்கு... எல்லாத்தையும் இப்பமே காட்டிட்டன்னா அடுத்த பதிவுக்கு என்ன பண்றதாம்? அதனால பொறவு பாக்கலாம். இப்போ விடு ஜுட்...!


ஒரு பழைய சித்திரக் கதை!!!

$
0
0
ஆனந்த விகடன் தீபாவளி மலரில் முன்பு வெளியான சித்திரக் கதை இங்கே உங்களுக்காக... நன்றி ஆ.வி.!


சாவியை மாற்றிய அவன், அவளிடமிருந்து தப்பினானா... இல்லை, அவள் அதையும் சமாளித்தாளா... என்பதை அறிய அடுத்த பகிர்வு வரை.. வெய்ட்டீஸ் ப்ளீஸ்...!!

ஒரு பழைய சித்திரக் கதை - 2

$
0
0
சாவியை மாத்திட்டதால அவகிட்டருந்து தப்பிச்சுட்டம்னு நெனச்சான் அவன். ஆனா... (இப்பதான் இந்தப் பகிர்வைப் பாக்கறவங்க வேகமாப் போய் முதல் பாதியைப் பாத்துட்டு வந்துருங்க, க்விக்...)




புடிச்சிருக்கா இது...? இன்னொரு சுவாரஸ்யத்தோட திரும்ப வர்றேன்.

மறுபடியும் ஒரு சித்திரக் கதை!!!

$
0
0
னதை நெகிழச் செய்யும் தன் சிறுகதைகள் பலவற்றால் என்னைக் கட்டிப் போட்ட நண்பர்கள் சுபா, பின்னாட்களில் பரபர விறுவிறு துப்பறியும் நாவல்கள் நிறையப் படித்து அவற்றையும் ரசிக்க வைத்தார்கள். துப்பறியும் ஜோடிகளில் இவர்களின் நரேந்திரன் -வைஜயந்திக்குத் தனியிடம் உண்டு. இந்த சித்திரக் கதையிலும் அவர்களின் அமர்க்களத்திற்குக் குறைவில்லை... பாருங்களேன்..!

தேடி வந்த ஸ்டெல்லாவை நரேந்திரன் கண்டுபிடித்தானா..? கண்டுபிடித்ததும் நிகழ்ந்தது என்ன..? கற்பனையைச் சற்று ஓடவிட்டு யூகியுங்கள்.. சுபா தந்திருக்கும் எதிர்பாராத அந்த முடிவை நான் தரும் அடுத்த பதிவில் கண்டு ரசியுங்கள்.

மறுபடியும் ஒரு சித்திரக் கதை - 2

$
0
0
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த (எதிர்பார்த்தீர்கள்தானே..) சித்திரக் கதையின் இரண்டாவது மற்றும் முடிவுப் பகுதி இதோ...


ஹவ் இஸ் திஸ்...?

சாண்டில்யன் நடத்திய கமலம்!

$
0
0

1982ம்ஆண்டு நான் பள்ளி மாணவனாக இருந்தபோது ‘கமலம்’ பத்திரிகையின் முதல் இதழ் வெளியானது. சரித்திரக்கதை வித்தகர் சாண்டில்யன் அவர்கள் ஆசியராகப் பொறுப்பேற்றிருந்தார். அவரது கதைகள் எதுவும் அதுவரை படித்திராததால் அவர் எத்தனை பெரிய எழுத்தாளர் என்பது எனக்குக் கிஞ்சித்தும் தெரியாது. ‘சாண்டில்யனின் கதாபாத்திரங்கள் உங்களுடன் பேசுகிறார்கள்’ என்று தலைப்பிட்டு யவனராணி பேசுவதாக ஒரு கட்டுரை முதல் இதழில் வந்திருந்தது. இரண்டாம் இதழில் மஞ்சளழகி பேசுவதாக ஒரு கட்டுரை. இரண்டையும் படித்தேன். சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. என்றாலும் யார் இந்த யவனராணி, மஞ்சளழகி என்பது புரியாத நிலையில் மனதில் தங்கவில்லை. பின்னாளில் சாண்டில்யனை முழுமையாகப் படித்து ரசித்த சமயங்களில்தான் இந்தக் கட்டுரைகளையும் அதன் முழு வீச்சுடன் ரசிக்க முடிந்தது.

முதல் சில இதழ்களிலேயே சாண்டில்யன் ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். அதன்பின் இருகூரான் என்பவர் ஆசிரியராக இருந்து சிலமாதங்கள் வெளியானது. அதன்பின் அந்த வார இதழ் வரா இதழானது. சாண்டில்யன் விலகியதுமே இந்தக் கதாபாத்திர உரையாடல் தொடர் வெளிவராமல் போனது. அது பெரிய விஷயமல்ல... அவர் அந்த இதழில் தொடங்கியிருந்த ‘கடல் நீலி’ என்கிற தொடர்கதையும் பாதியில் நின்று போனது.

சாண்டில்யனின் ‘ராஜதிலகம்’ வாசித்திருக்கிறீர்களா? அற்புதமான நாவல். காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டிய ராஜசிம்ம பல்லவன் இளவரசனாக இருந்து சாளுக்கியர்களை வெற்றி  கொண்ட வரலாற்றை விவரிக்கிற கதை அது. பின்னாளில் ராஜசிம்மன் ஆட்சிக்கு வந்ததும் சீனம் வரை சென்று பல வெளிநாடுகளிலும் வெற்றிக் கொடி நாட்டினான். ”எனக்கு ஆயுளும் சமயமும் வாய்த்தால் பின்னொரு சமயம் அதை எழுதுகிறேன்.” என்று சாண்டில்யன் அத்தொடரை நிறைவு செய்கையில் குறிப்பிட்டிருந்தார். 

கமலம் இதழில் அந்த வரலாற்றைத்தான் அவர் எழுத ஆரம்பித்திருந்தார். ராஜசிம்ம பல்லவன் (இரண்டாம் நரசிம்மன்) மன்னனாக தன் இரு தேவியர்களுடன் வர, வேறோர் இளைஞனைக் கதாநாயகனாக வைத்துத் துவங்கி இருந்தார். அது பாதியில் நின்று விட்டது மிகப்பெரிய சோகம். 

பின்னாளில் அவர் உடல்நலக் குறைவுற்று நீண்ட மருத்துவமனை வாசத்திற்குப் பின் மீண்டு வந்ததும் குமுதம் வார இதழில் ‘சீன மோகினி’ என்ற தலைப்பில் அதே சரித்திரத்தை ராஜசிம்மன், அவன் தேவியர் தவிர வேறு பாத்திரங்களை மாற்றி புதிதாக எழுதத் தொடங்கினார்.  இம்முறையும் பாதியில் நின்று விட்டது அந்தச் சரித்திரக் கதை. காரணம் காலன் அவசரப்பட்டு அவரைக் கவர்ந்து சென்று விட்டதால்.
இரண்டு முறையும் கால் பகுதிகூட வராமல் அக்கதை நின்றுவிட்டதில் ஆர்வமுடன் படித்து வந்த வாசகனாக எனக்கு மிக வருத்தம்தான். ‘சீன மோகினி’ வந்த குமுதப் பிரதிகள் என்னிடமில்லை. ஆனால் யவனராணியின் உரையும், கடல் நீலியின் முதல் அத்தியாயமும் இங்கே உங்களுக்காகத் தந்துள்ளேன். படியுங்கள், ரசியுங்கள், ரசித்ததைக் கூறுங்கள்.



Viewing all 41 articles
Browse latest View live